தமிழ்நாடு

  • பனை மரம்” பற்றிய விழிப்புணர்வு
    தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தன்னார்வலர்கள் 12- நபர்கள் DSC – Society நிறுவனர் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் தலைமையில் சிங்கப்பூர் & மலேசியா சென்று உலக தமிழர்களின் கற்பக விருச்ச மரம் “பனை மரம்” பற்றிய விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாயத்தைப் பற்றிய நிகழ்வில் கலந்து கொள்ள புறப்பட்டு செல்கிறார்கள் அவர்களை புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் R. செல்வம் அவர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள் நிகழ்வில் சதீஷ், பாலச்சந்தர், ஸ்டீபன் ராயப்பா, வண்டிமுத்து, எழிலரசன், கோபிநாத், லெனின், அப்துல் காதர், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்.
  • வீரிருப்பு கிராமத்தில் மருத்துவ முகாம்
    வீரிருப்பு கிராமத்தில் மருத்துவ முகாம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வடக்கு புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வீரிருப்பு கிராமத்தில் வைத்து கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் துவங்கி வைத்தார். வீரிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சண்முகராஜ், துணைத் தலைவர் முருக லட்சுமி, கவுன்சிலர் ராமலட்சுமி கருத்த பாண்டி,வழக்கறிஞர் ராமராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பாலகுமார், மருத்துவர்கள் சரவணகுமார், மகாதேவி, சிவசங்கரி,கோவிந்தராஜ்,சித்த மருத்துவர் செல்வராணி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில்வட்டார சுகாதார பார்வையாளர் சமுத்திரம்,சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி, ஆனந்தராஜ், சின்னத்தம்பி, கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை பணியாளர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • சுரங்க பாலத்தில் மழை காலங்களில் மழை நீர் வெளியேற சரியான திட்டங்கள் வகுக்கப்பட வில்லை
    பொம்மிடி – தொப்பூர் சாலையில் பொம்மிடி ரயில் பாதையின் கீழ் உள்ள சுரங்க பாலத்தில் மழை காலங்களில் மழை நீர் வெளியேற சரியான திட்டங்கள் வகுக்கப்பட வில்லை, சிறிய அளவிலான மழை பெய்தாலே பாலத்திற்குள் அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்கிறது, பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என அனைத்திற்கும் இந்த ஒரே சாலை மட்டும் தான் உள்ளது. எனவே வாகன ஒட்டிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர், உள்ளே செல்லும் பொழுது தண்ணீரினால் இரண்டு சக்கர வாகனங்கள் இயங்காமல் பழுதாகி நின்று விடுகின்றது, வாகனத்தோடு விழ நேரிடுகின்றது, தேங்கி நிற்கும் மழைநீரில் கழிவுநீரும் கலந்துள்ளதால் பெரும் சுகாதார சீர்கேடும் உண்டாகின்றது, இதற்கு நிரந்தர தீர்வாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன், தற்போது உடனடியாக தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை வேண்டும்.
  • வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் 89 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மு.நாவளவன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் பா. சிவனேசன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம்,பொருளாளர் சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ்,வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன் கலந்துகொண்டு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.
  • சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.
    ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நுகர்வோர் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் எபி ஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவள்ளி கலந்து கொண்டு, சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் நாம் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் குறித்தும், சாலை விபத்துக்கு மனித தவறுகள் தான் முக்கிய காரணம் எனவும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக வரலாற்றுத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றியுரை வழங்கினார். நிகழ்வினை மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி காவியா தொகுத்து வழங்கினார்.