கடலூர் மாவட்டத்தில் ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்


கடலூர் மாவட்டம், பி.முட்லூர், கணக்கன்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பசுந்தீவனம் தாதுஉப்புக் கலவையை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,

கடலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமை இனங்களுக்கு 100% கோமாரி தடுப்பூசி முகாம் இன்றைய தினம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமின் வாயிலாக கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செயற்கை முறை கருவூட்டல், கன்று பரிசோதனை, சினைப் பரிசோதனை, மலட்டு தன்மை நீக்கம். குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின்கீழ் ஒரு கால்நடை பெரு மருத்துவமனையும். 5 கால்நடை மருத்துவமனையும், 92 கால்நடை மருந்தகங்களும். 56 கால்நடை கிளை நிலையங்களும். ஒரு நடமாடும் கால்நடை மருந்தகமும். ஒரு கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் மொத்தம் 157 கால்நடை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,53,663 மாடுகளும், 6.031 எருமை மாடுகளும், 42,675 செம்மறியாடுகளும், 3,41,587 வெள்ளாடுகளும் 9,50,457 கோழிகளும். 8.280 பன்றிகளும் விவசாய பெருமக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றினை பாதுகாத்தல், பெருக்குதல் (ம) வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்”கீழ் கடலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் வரும் ஜூலைமாதம் 02 ஆம் தேதி முதல் ஜூலை22 ஆம் தேதி வரை ஏழாவது சுற்றுகால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி அனைத்து கிராமங்களிலும் 3.0 இலட்சம் எண்ணிக்கை 2बीबा பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் 100% தடுப்பூசிப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
கால் (ம) வாய் நோயானது (கோமாரி) கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு. எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது.

இளங்கன்று
களில் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம் ஆகவே, இந்த நோயை கால்நடைகளுக்கு ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள செயல் திட்டம் தீட்டி ஆண்டுக்கு இருமுறை வீதம் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி 6 சுற்றுக்கள் முடிவடைந்து விட்டது. தற்போது ஜூலை மாதம் 02 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை ஏழாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள். பேரூராட்சி, நகரியம் மற்றும் நகராட்சிகளில் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்
பட உள்ளது.


இதனடிப்படையில் கடலூர். சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள 3.0 இலட்சம் கால்நடைகளுக்கும் ஜூலை மாதம் 02 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை ஏழாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே. கால்நடை வளர்ப்போர்கள் தங்கள் பகுதியில் உள்ள முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் டாக்டர் பொன்னம்பலம், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *