கரூர் செய்தியாளர் மரியான் பாபு
SIR ஐ கண்டித்து கரூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு எஸ் ஐ ஆர் ஐ கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மதசார்பற்ற கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்பாட்த்திற்க்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அரவகுறிச்சி இளங்கோ,குளித்தலைமாணிக்கம்,கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் பரணி மணி மற்றும் திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் குமார் சாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்டீபன் பாபு, மதிமுக சார்பில் ஆசை சிவா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பு ஜோதிபாசு தண்டபாணி, விடுதலையை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகரச் செயலாளர் கராத்தே இளங்கோ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.