பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் குன்னம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆர். சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோவில்பாளையம் தேனூர் தாமஸ் என்ற செந்தில்குமாரை ஜாதி பெயரை சொல்லியும் மிகவும் கீழ்த்தரமாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்த மணிவேல் என்பவர் மீது குன்னம் காவல்நிலத்தில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததை கண்டித்தும் மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் எஃப் ஐ ஆர் 382/2025 sc/st வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபோடப்பட்டு கைது செய்யாமல் இருந்து தாமதப்படுத்துவதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செல்லமுத்து தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் சத்தியசீலன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் மாவட்ட செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராஜேந்திரன் விவசாய சங்க மாவட்ட செயலாளர கருணாநிதி தமிழ்நாடு தீண்டாமை முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் மற்றும் முன்னிலை தோழர்கள் முத்துச்சாமி அறிவழகன் முத்து, ராசாத்தி தனராஜ் கலியமூர்த்தி மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.