தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதை கருத்தில் கொண்டு ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதன் துவக்க விழா கங்கா பரமேஸ்வரி நகர் பூங்காவில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா மற்றும் அரசு அதிகாரிகள் ரோட்டரி கிளப் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை பார்வையிட்ட பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி திரை மூலம் மாநகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா பார்வையிட்டனர்
அப்போது மாநகரில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கேமரா செயல்பாடு சாலைகளை பார்வையிட்டனர் அதன்மூலம் தூத்துக்குடி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களுக்கும் இணைப்பு மாநகராட்சி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மாநகரில் எந்த நிகழ்வையும் கண்காணிக்க முடியும் குறிப்பாக பக்கீல் ஓடை. கழிவுநீர் கான் ஆகியவற்றில் பொதுமக்கள் குப்பைகளை தூக்கி எறிவதை கண்காணிக்க முடியும் என்பதையும் உறுதி செய்துள்ளனர் அதன் பின்பு மேயர் ஜெகன் கூறுகையில் மாநகரில் 3000 கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும் மழைக்காலங்களில் எந்தெந்த பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதையும் கண்காணித்து அதன் அடிப்படையில் உடனடியாக மழை நீர் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அது போல பக்கில் ஓடை கழிவுநீர் கான்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசுவதை கண்காணிக்க முடியும் அதன் மூலம் தடுக்க முடியும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார் உடன் ஆணையர் பிரியங்கா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகையால் இனி வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகரில் எந்த ஒரு நிகழ்வுகள் நடந்தாலும் மாநகராட்சியில் இருந்து மாநகரை கண்காணிக்க முடியும் என்று உறுதியாக தெரிய வருகிறது