அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள் நடும் இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி துவக்கி வைத்தார் தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் இணைந்த மரமாக விளங்கும் பனை மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பனை விதைகள் நடுதல் துவங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முனைவர் சிவராமன் உதவி திட்ட அலுவலர் நந்த கோபாலகிருஷ்ணன் உதவி இயக்குனர் ஊராட்சிகள் பழனிச்சாமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன் மலர்க்கண்ணன் வனச்சரகர் பழனிசாமி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வ இளையராசன் ஊராட்சி செயலாளர் தமிழ்குமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்