வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்.
திண்டுக்கல் நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மற்றும் மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறை கட்டிடங்களை இன்று மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் திறந்து வைத்தார்.
உடன் துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், மண்டலத் தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர், வார்டு செயலாளர் செந்தில்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், வார்டு திமுக நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.