மன்னார்குடி, நவம்பர்.14
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை மத்திய அரசின் நாசா முக்த் பாரத் அபியான் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடத்தப்பட்டது.
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
குழந்தை திருமணம் நடைபெறுதலை தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல், 14 வயதிற்கு உட்பட்ட உறுதிப்படுத்துதல், அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை குழந்தை தொழிலாளர் உருவாக்குதல், மது போதைக்கு அடிமையாவதை தடுத்தல் போன்றவற்றினை இல்லாத நிலையினை முன்னிலைப்படுத்தி நடைபயணத்தில் சென்றவர்கள் முழக்கமிட்டு சென்றனர்.
இப்பேரணியினை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் துவக்கி வைத்தார்கள். இப்பேரணி இராஜகோபாலசுவாமி திருக்கோவிலிருந்து புறப்பட்டு பெரிய கடைத்தெரு, காமராஜர் பேருந்து நிலையம் வழியாக தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவுற்றது.
இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தை கடத்தல் மற்றும் குற்ற தடுப்பு பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர், நகர காவல் ஆய்வாளர், வட்டாச்சியர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.