தென்காசியில் சிவந்தி நகரில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கை
நடைப்பெற்றது.
சிவந்தி நகர் காந்தமதி ஜெயசந்திரன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையினை தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார்அவர் பேசும் போது பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை தென்காசி மாவட்டத்தில் கோலாகலமாக மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பிப்போம் என்றார்.
மேலும் தமிழக அரசு தென்காசி குத்துக்கல்வலசை ரவுண்டானாவில் இருந்து ஹவ்சிங்போர்டு வரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் இப்பொழுது காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக இருக்கிறது
இன்னும் ஒரு சில வாரங்களில் குற்றாலம் சீசன் தொடங்க இருக்கிறது தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கூடுதலாக தென்காசிக்கு வந்து செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கிறது இதனால் இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிகமான சிரமத்திற்கு உள்ளாவார்கள் அதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் குத்துக்கல்வலசை ரவுண்டானா முதல் தென்காசி ஹவுசிங் போர்டு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில மாநில பொருளாளர் சுப்பிரமணியன்
இசக்கிமுத்து நாடார் காந்திமதி ஜெயச்சந்திரன் கணேசன் சிவந்தி நகர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்