டிட்வா புயல் காரணமாக காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தற்போது வரை நிலை கொண்டு இருக்கும் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது தேங்கி வரும் நிலையில் திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் குளம் நீண்ட ஆண்டுகளாக வறட்டு காணப்பட்ட நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக மழை நீர் குளத்தில் தேங்கி சுமார் 10 அடிக்கு மேல் நிரம்பி வருகிறது
கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்த சீரிய முயற்சியின் காரணமாக மழை நீரானது குளத்தில் நிரம்புவதை திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் நேரில் வந்து பார்வையிட்டார்