புதுச்சேரி ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், A.K.ராஜசேகர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… கடும் டிட்வா புயல் மற்றும் மழையால் புதுச்சேரி காரைக்கால் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
குடும்பங்களுக்கு நிவாரணம்: டிட்வா புயல் மழையால் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கியுள்ள புதுச்சேரி மக்களின் துயரைத் துடைக்க, அனைத்து குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வாழ்வாதார நிவாரண நிதியாக தலா 10,000 ரூபாய்) வழங்க வேண்டும்.
வீடுகள் சேதம்: டிட்வா புயல் மழையால் இடிந்து மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
விவசாயிகள் நிவாரணம்: டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை உடனடியாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50,000 ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும். மற்றும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
மீனவர் நலன்: டிட்வா புயல் மற்றும் மழையால் சேதமடைந்த மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகளின் சேத மதிப்பை கணக்கிட்டு, மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
சாலைகள் சீரமைப்பு: டிட்வா புயல் மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் உயிரைக் காக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் சாலைகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்று புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறோம் என்று ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், A.K.ராஜசேகர் தெரிவித்துள்ளார்