கோவை மாவட்டம் வால்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு 11 வது வார்டுக்கு உட்பட்ட நடுமலைஎஸ்டேட் மற்றும் பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது
இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் நகர்மன்ற துணைத்தலைவருமான த.ம.ச.செந்தில் குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்
பள்ளியின் தலைமையாசிரியர் கென்னடி, சரவணன் மற்றும் திமுக நிர்வாகி சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்