அவசர காலங்களில் செயல்பட வேண்டிய வழிமுறைகளை செயல் விளக்கமாக நடித்து காட்டிய பள்ளி மாணவர்கள்

350 மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வு ஐன்ஸ்டீன் (Einstein) உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு

போக்குவரத்து அதிகம் இல்லாத கிராமப்புற பகுதிகளில் ஏற்படும் அவசர நிலை காலங்களில் செயல்பட வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து 350 பள்ளி மாணவர்கள் இணைந்து செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது..

செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம், இ.சி.ஆர்.பகுதியில் அமைந்துள்ள 100 அவசர நிலைகள் மற்றும் அவற்றிற்கான முதலுதவி முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது..

செயிண்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதில், 350 மாணவர்கள் இணைந்து, ஒவ்வொரு அவசர நிலையும் அதற்கான முதலுதவி செய்முறையும் 3 நிமிடங்களுக்குள் விளக்கமாகச் செய்து காட்டினர்.

இதில்,மாரடைப்பு,வாகன விபத்து,தீ விபத்து,இயற்கை பேரிடர்,வெள்ள அபாயம்,போன்ற அவசர கல நேரங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,பாம்பு கடி போன்ற விஷக்கடிகள் ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் போன்ற 100 அவசர கால பாதிப்புகளுக்கு செய்ய வேண்டி முதலுதவி குறித்து 350 பள்ளி மாணவர்கள் இணைந்து செயல் விளக்கமாக நடித்து காண்பித்தனர்..

மாணவர்கள் செய்த இந்நிகழ்வு ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பங்கு தந்தை செபாஸ்டியன் கூறுகையில் ,எங்கள் பகுதி கிராமப்புறமாக இருப்பதால், அவசர காலங்களில் முதலுதவி பெற கூட மக்கள் செங்கல்பட்டுக்கு செல்வதற்கு சுமார் 1½ மணி நேரமும், புதுச்சேரிக்கு செல்ல 1 மணி நேரமும் ஆகிறது. இத்தகைய சூழ்நிலையில், உடனடி முதலுதவி அறிவு மக்களிடம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *