ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகப்பு வாயிலில் நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்க அமைப்பின் மாவட்ட தலைவர் டி. சுரேஷ் குமார் தலைமை வகித்தார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கான நல வாரிய பதிவு அலுவலகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை மாதம் 3000 உயர்த்தி வழங்க வேண்டும் இயற்கை மரணத்திற்கு ஒரு லட்சமும் விபத்து மரணத்திற்கு 5 லட்சமும் அமைப்பு சாரா துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிரந்தரமாக ஒரே தொழிலில் பணிபுரிய வாய்ப்பு இல்லை என்பதால் வேறு தொழில் பணிபுரிய நேரும் போது வாரியத்தில் எளிதாக மாற்றம் செய்திட உரிய வழிவகை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் ஜே குணசேகரன் மாவட்ட செயலாளர் ஆர் சந்திரசேகர ஆசாத் அமைப்புசாரா மாவட்ட பொருளாளர் முகமது இஷாக் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிற்சங்க ஏ ஐ டி யு சி சாலையோர வியாபாரிகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சிலம்பாட்ட கலைஞர்கள் சங்க நாட்டுப்புற கலை பண்பாட்டு கலைஞர்கள் சங்க தேரடி சுமைப்பணி தொழிலாளர் சங்க அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்