எஸ்.செல்வகுமார்
சீர்காழி செய்தியாளர்
சீர்காழியில் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் வீட்டில் 52 பவுன் நகை இரண்டு லட்சம் ரொக்கம் கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு மதீனா நகர் 3 வது தெருவில் கடைசி வீட்டில் வசிப்பவர் நடராஜன் (வயது 78), இவர் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் ஆவார். இவர் தனது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 70) மற்றும் இரு மகள் பேரன் குழந்தைகளோடு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடராஜன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கீழ் தளத்தில்தான் இரவு நேரங்களில் தங்கி வருவார்கள் இதைப்போல் மேல் தளத்தில் இவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்கி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடராஜன் அவரது மனைவி உள்ளிட்ட அனைவரும் கீழ் தளத்தை பூட்டிவிட்டு மேல் தளத்தில் தூங்கிவிட்டு காலை கீழ்தள கதவை திறக்க முற்பட்ட போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அருகிலேயே இரும்பு பாறை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள், ஆடைகள் சிதறி கிடந்தது மேலும் பீரோவில் இருந்த 52 சவரன் நகை மற்றும் ரூ 2 லட்சம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நடராஜன் சீர்காழி காவல் நிலையத்திற்கு புகார் செய்தார்.
புகார் அடிப்படையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், அசோக் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கொள்ளை போன இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடையும் சேகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் நேற்று இரவு கீழ்த்தளத்தில் உள்ள வீட்டில் நடராஜன் குடும்பத்தினர் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் விளை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்து முன்புற சுவர் ஏறி குதித்து வீட்டின் கொள்ளை புறத்திலிருந்து இரும்பு பாறையை எடுத்து வந்து முன்புற கதவை உடைத்து நகைகள் மற்றும் பணங்களை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.