கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ்.
கிருஷ்ணகிரி தலைக்கவசம் அணிவித்து சென்ற ஆட்சியர் மறுநிமிடமே திரும்பி வாங்கிக் கொண்ட அரசு ஊழியர்கள்.
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் வாகன ஒட்டிகளுக்கு ஆட்சியர் அணிவித்து தலைக்கவசத்தை ஒரு நிமிடத்தில் திரும்பப் பெற்றுச் சென்ற அரசு அலுவலர்களின் செயல் மக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சரயு கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். பின்னர் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சியர் புதிய தலைக்கவசத்தை அணிவித்தார்.
இதனால் வாகன ஒட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ஆட்சியர் தலைக்கவசம் அணிவித்துச் சென்ற சிறிது நேரத்தில், அங்கிருந்த அரசு ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்த நபர்களிடம் சென்று தலைக்கவசத்தை மீண்டும் வாங்கி சென்றனர்.
தலைக்கவசம் இலவசமாகக் கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் சிறிது நேரத்தில் ஏமாற்றம் அடைந்து சென்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.