மதுரை கிழக்கு
கொடிக்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா…..
மதுரை கிழக்கு கொடிக்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழா மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சுப்புராஜ் தலைமையில்,
வட்டாரக்கல்வி அலுவலர் எஸ்தர் இந்திராணி , வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் லதா, ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி , மற்றும் சிறப்பு விருந்தினரான ஆயி என்ற பூரணம் அம்மா முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.
தலைவர் சத்யா, மற்றும் உதவி ஆசிரியர்கள் பங்கேற்புடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இறுதியில் தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் நன்றி கூறினார்.