முத்து விழா கண்ட பெருங்கவிக்கோ வாழ்க ! வாழ்க !
கவிஞர் இரா .இரவி !

கவியரசர் என்றால் கண்ணதாசன் !
கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் !

பெருங்கவிக்கோ என்றால் வா .மு .சேது ராமன் !
உலகம் அறிந்த உண்மை இது !

மனைவிக்கு மாளிகை கட்டினான்
மன்னன் சாசகான் அன்று !

மனைவிக்கு கோயில் கட்டினார் !
மன்னர் கவிதை மன்னர் வா .மு .சே.!

கோயில் கட்டியதோடு நில்லாமல் !
கட்டிய கோயிலில் பூசைகள் செய்கிறார் !

கவிஞர்களுக்கு பொற்கிழி வழங்குகிறார் !
கவிஞர்கள் இளைப்பாறும் வேடந்தாங்கல் !

இலங்கைத் தமிழருக்காகப் போராடியவர் !
இனிய தமிழுக்காக நடைபயணம் சென்றவர் !

கணினி யுகத்திலும் அற்புதமான !
காப்பியங்கள் வடிக்கும் பெருங்கவிக்கோ!

நோபல் தவம் இருக்கும் தமிழகத்தின்
நோபல் நாயகர் மரபின் மன்னர் !

நோபல் மாலை உந்தன் தோள்களில் விழும் !
நோபல் அன்று முதல் பெருமைகள் பெறும் !

பையில் பணம் இன்றியே உலகம் யாவும்
பயணிக்கும் உலகம் சுற்றும் வாலிபர் !

வயது எண்பதைத் தொட்டு விட்டபோதும் !
வாலிபர் போலவே இயங்கிவரும் படைப்பாளி !

உலகம் போற்றும் கவிதைகள் வடிப்பவர் !
உலகத் தமிழர் உள்ளங்களில் வாழ்பவர் !

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் !
அடுத்து என்ன செய்வீர்கள் கேள்விக்கு !

அன்பு நண்பர் பெருங்கவிக்கோவிடம் செல்வேன் !
அன்று பதில் சொன்னார் கலைஞர் !

பெருங்கவிக்கோவிடம் ஒரு வேண்டுகோள் !
கலைஞரை இலக்கியத்திற்கு அழையுங்கள் !

திருவள்ளுவரையும் ஆண்டவரையும் கவியரசனையும்
திருமகன்களாகக் கொண்ட பாசமிகு தந்தை !

முத்தான கவிதைகளை தமிழ்ச் சொத்தாக்கி வரும் !
முத்து விழா காணும் பெருங்கவிக்கோ வாழ்க ! வாழ்க !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *