தென்காசி மாவட்டம் வி கே புதூர் தாலுகா அலுவலகம் முன்பு காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியல் லிருந்து அகற்றக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொது குழு உறுப்பினர் சங்கரன் தலைமை வைகித்தார்.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆண்டபெருமாள், வல்லாளராஜா, பன்னீர்செல்வம், சங்கரன், முத்துப்பாண்டியன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் விஜய முருகன், மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் வேணுகோபால், மாவட்டத் துணைத் தலைவர் வேலு மயில், திருமலை குமாரசாமி, ராகவன் ஆகியோர்,மத்திய மாநில அரசு விலை நிலங்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும்,
வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் பெற விவசாயிகளை பல துறைகளில் சான்று பெற அலைக்கழிக்காதே,மாணூர் கால்வாயில் உயர்த்தப்பட்ட சட்டர் உயரத்தை பழைய நிலைமையில் உள்ள உயர்த்துவதை குறைத்திடு, நல்லகுளம், முசிறிகுளம், காரைகளில் சாலை வசதி ஏற்படுத்தப்படுத்து,
உயிர் சேதத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கிடு, பயிர் சேதத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்கு உள்ளிட்ட கோரிக்கை கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் வீகே புதூர் விவசாய தொழிற்சங்கம் தாலுகா பொறுப்பாளர் ராமசாமி, ஆலங்குளம் பாலு,
வீ கேபுதூர் நயினார், முத்துப்பாண்டியன், முனியாண்டி, இசக்கி, மாரிமுத்து பாண்டியன், மாரிமுத்து, முனியாண்டி,கழுநீர்குளம் நவநீதகிருஷ்ணன், ஜோசப், சந்திரன், மதியழகன், பாபு . பன்னீர்செல்வம் , குத்தாலிங்கம், அருமை நாயகம், ராமர், முத்துகிருஷ்ணா பெரி செந்தில்குமார், ஜெயபிரகாஷ் ,அரிராமபெருமாள், ராஜபாண்டி கிருஷ்ணாபாண்டி யன், இசக்கி, தங்கராஜ்பாண்டி யன், அதிசயபுரம் காமராஜ், உட்பட பல கடந்து கொண்டனர்.