மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே அனுசரிக்கப்பட்டது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஏப்ரல் மாதம் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்ற தவறான சிந்தனையில் இருந்து மாற்றி”ஏப்ரல் கூல் டே’ யாக அனுசரிக்கப்பட்டது.
இது குறித்து பள்ளி செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன் கூறும் பொழுது இயற்கையை பாதுகாப்பது பள்ளி மாணவ மாணவியரின் கடமைகளில் ஒன்று ஆகும், எனவே ஏப்ரல் மாதம் முதல் நாள் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்ற வழக்கத்திற்கு பதிலாக அந்த நாளில் மரங்களை நட்டு வைத்து நம் வாழும் சுற்றுப்புறத்தை பசுமையாகவும் குளிர்ச்சி நிறைந்ததாகவும் மாற்றுகின்ற நோக்கில் நம் பள்ளியில் ஏப்ரல் முதல் நாளை ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடி வருவதை முன்னிட்டுமாணவர்கள் அனைவரும் மரங்களை நட்டு வளர்ப்பதை வழக்கமாகி கொள்ள வேண்டும் இதன் மூலம் நமது பூமியை குளிர்ச்சி மிக்கதாக மாற்ற முடியும் என்று கூறினார்.
இதை அடுத்து பள்ளி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர் கணேசன், பள்ளி முதல்வர் டாக்டர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் முனைவர் சக்திவேலு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள் முருகேசன், ஜெயலட்சுமி மற்றும் பராமரிப்பு துறையைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.