வாடிப்பட்டியில் வக்கீலை தாக்கிய குற்றவாளியை கைது செய்ய கோரி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
வாடிப்பட்டி

வாடிப்பட்டியில் சொத்து தகராறில் வக்கீலை தாக்கி காயப்படுத்திய குற்றவாளியை போலீசார் கைது செய்ய வலியுறுத்தி வாடிப்பட்டி தாலுகா நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாப்பாட்டத்தில் ஈடூபட்டனர்..
வாடிப்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் சந்திரசேகரன்.58.இவரது உறவினரான சிவக்குமார் மகன் நிஜாந்தன் இருவருக்கும் சொத்து பிரச்சனையில் முன் பகை இருந்து வந்து உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் வாடிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்த சந்திரசேகரனிடம் வீடு புகுந்து நிஜாந்தன் தகராறு செய்து தாக்கி உள்ளார்.
இதில் வக்கீல் சந்திரசேகரனின் இடது கை முறிந்து காயமடைந்த நிலையில்
இது சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசில் வக்கீல் சந்திரசேகரன் புகார் செய்து உள்ளார்.புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியும் வக்கீல் சந்திரசேகரன் மீது பொய் வழக்கு போட்ட வாடிப்பட்டி போலீசாரை கண்டித்து நேற்று காலை 11.மணியளவில்
வாடிப்பட்டி தாலுகா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் முத்துமணி தலைமையில் செயலாளர் பாலகிருஷ்ணன் துணை செயலாளர்கள் சிவராமன். காசிநாதன். பொருளாளர் அழகர்சாமி. துணைதவைவவர் தங்கபாண்டி மற்றும் வழக்கறிஞர்கள் ராமசாமி அரிச்சாந்திரன்.நேதாஜி.
தயாநிதி.பசீர்.உள்ளிட்டோர் பலர் ஆர்ப்பாட்டம் செய்து வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழப்பினர். சுமார் அரைமணிநேரம் நீடித்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டட்டதால்.இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தற்போது நீதிமன்றதில் உள்ள இ.பில்லிங் முறையை இரத்து செய்துபிராது முறையை நடமுறைபடுத்தக்கோரி ஏப்.1.முதல் 3..தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்து உள்ளனர்.