திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் எதிரில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வருகின்ற சாலையில் அதிவேகமாக வந்த மினி பஸ் மோதியதால் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டத்திலுள்ள படியூர் மின்வாரிய பிரிவு அலுவலக ஊழியரான பிரசாந் என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார் ஆனால் அதிவேகமாக மினி பஸ் நிற்காமல் சென்றது உடனடியாக அங்குள்ள காவல் துறையினர் மினி பஸை துரத்தி பஸ்சில் தட்டி நிறுத்தினார்.

அப்போது அந்த மினி பஸ்சில் மிகவும் வயதான உடல்நலம் சரியாக இல்லாத வயது முதிர்ந்த நபர் மினி பஸை ஓட்டி வந்தது தெரிய வந்தது அப்போது அந்த வயது முதிர்ந்த நபரான டிரைவர் கை கால் நடுக்கத்தில் இருந்தார்.

தற்போது அதிவேகமாக வந்த மினி பஸ் மோதியதால் படுகாயமடைந்த மின்வாரிய ஊழியர் பிரசாந்துக்கு தலை, காலில் பலத்த காயமடைந்து நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

காவல் துறையினர் சிக்கினலில் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் அதிவேகமாக வந்த மினி பஸ் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *