திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளின் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை பெற தஞ்சாவூர் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு வேளாண்மை பயிலும் மாணவிகள், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப்பயிற்சி பெற்று வருகின்றனர்.

இப்பயிற்சி முகாமை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி மற்றும் உதவி பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக நீடாமங்கலம் அருகிலுள்ள ஆலங்குடி கிராமத்தின் முன்னோடி விவசாயி நந்தகுமாரை சந்தித்து, அவரது வயற்பரப்பிற்கு சென்று மாணவிகள் அவரிடம் பாரம்பரிய நெல் ரகங்கள், பச்சைப் பயிர் மற்றும் பாக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து உரையாடினர்.

மேலும் வம்பன் 6 மற்றும் ஆடுதுறை 3 ரக பச்சைப்பயிர் அறுவடையிலும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *