பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 321 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தலின் படியும் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) வழங்கும் பணி துவங்கியது .

மேட்டுப்பாளையம் நகராட்சி, பங்களா மேடு, சௌடாம்பிகா கோவில் வீதி பகுதியில் நடைபெற்ற வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.குணசேகரன் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் திரு.சங்கர்லால், உடனிருந்தார்.நகராட்சிஆணையர் திருமதி .இரா.அமுதா அவர்கள் மேற்பார்வையில்
நகராட்சிபணியாளர்கள் திருமூர்த்தி,ஜெயராமன் வாக்குச்சாவடி நிலை அலுவலர் கயல்
விழி ஆகியோர் அப்பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மேற்கொண்டு, பதிவேட்டில் கையொப்பம் பெற்று வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு, வாக்காளர் கையேடு ஆகியவற்றை வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *