தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20
இது குறித்து தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவியாளர் இதுகுறித்து கூறியதாவது..
தற்போது தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி,திருநெல்வேலி,கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நோயால் மரங்கள் மடியாவிட்டாலும் மரங்கள் மெதுவாக சோர்வடைவதால்,காய்களின் எண்ணிக்கையும் மற்றும் தரமும் குறைந்து வருகின்றது.
இந்நோயானது அனைத்து வயது மரங்கள், மண், வீரிய ஒட்டு மற்றும் நாட்டு இரகங்களிலும் காணப்படுகிறது. இந்நோய் இளம் மரங்களில் ஏற்பட்டால் பூக்கும் தருணம் தள்ளிப்போவதுடன் மட்டுமல்லாமல் இலை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு காய்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்.
வேர் வாடல் நோயின் அறிகுறிகள்
கேரளா வேர் வாடல் நோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினம். எவ்விதகாரணமும் இன்றி அதிகமாக குரும்பை உதிர்தல் இதன் முதல் அறிகுறி ஆகும். பின்பு தென்னை மரத்தில் உள்ள மட்டைகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி இலை மடல்களின் ஓரங்கள் கருகி கீழ்நோக்கி வளைந்து காணப்படும்.
இலை மடல்களின் கருகிய பகுதிகள் மரத்திலிருந்து உதிர்ந்து விடுவதால் குச்சிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். இந்நோயானது இளங்குருத்து பகுதியை தாக்கி குருத்துப் பகுதியை அழுக செய்யும்.
மேலும் குருத்து இலைகளிலும் இலைஅழுகல் அறிகுறிகள் தென்படும். இதனால் பாதிக்கப்பட்ட இலைகளில் வெறும் குச்சிகள் மட்டும் காணப்படும். மேலும் பூங்கொத்து கருகுதல் மற்றும் வேர் அழுகுதல் ஆகியவை இவற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.
ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகள்
- இந்நோய் பிற மரங்களுக்கு பரவுதலை தவிர்க்கும் வகையில் வருடத்திற்கு 10 காய்களுக்கும் குறைவாக அல்லது காய்கள் இல்லாமல் மிக அதிகளவு நோயுற்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
- நன்றாக வடிகால் வசதி செய்ய வேண்டும். பசுந்தாள் உரங்களான தட்டைப்பயிர், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு ஆகியவற்றை வட்டப்பாத்தி வளர்த்து பூக்கும் முன்னரே மடக்கி உழுது விட வேண்டும்.
தாராபுரம் வட்டார பகுதியில் இந்த தென்னை வேர் வாடல் நோயால் ஏதேனும் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது போன்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விவசாயிகள் தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கோள்ளப்படுகிறது. தொடர்புக்கு 8220709645,
9976267323 மற்றும் 9514411119.