தென்காசி
மே ;-12
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரத்தில் கடங்கனேரி கிராமத்திற்குட்பட்ட ரெட்டியார்பட்டியில் அங்குள்ள விவசாயிகளுக்கு
வறட்சி மேலாண்மை மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு பயிற்சியினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம்
கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் காளிராஜன், ஜோசப், மற்றும் ஜெயராஜன், நெல்சன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இப் பயிற்சியில் வேளாண்மைக்
கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு வேளாண் மாணவர்கள் (அகில், பரணி, ஜெயந்த், மாணிக்கராஜ், மணிவேல், மதன்ராஜ், சந்தோஷ், தமிழரசன்), ஆகியோர்
தென்னை மட்டைகள் மற்றும் இலைகளை வைத்து மண்ணின் ஈரப்பதத்தைப் சேமிக்கும் முறைகளை விவசாயிகளிடம் செய்து காண்பித்தனர்.
இப் பயிற்சியின் வாயிலாக
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டார பகுதிகளில் வேளாண் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.