அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோயிலில் அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் அய்யாதுரை பாண்டியர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் 70- ஆண்டு பிறந்தநாள் விழாவை யொட்டி, அதிமுக மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் அய்யா துரை பாண்டியர் தலைமை யில், ஏராளமான அதிமுகவி னர் பங்கேற்று, கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அனைத்து காரியங்களிலும் அவர் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்தனை செய்து சங்கரன் கோவில் அருள்மிகு ஸ்ரீ கோமதிஅம்பாள் சமேத ஸ்ரீ சங்கரலிங்கப் பெருமாள் சங் கரநாராயணர் ஸ்வாமி திருக் கோவிலில் தங்க தேர் இழுத்து ஸ்ரீ கோமதி அம்மாளை வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யா துரை பாண்டியர் , முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, இந்தக் கோயிலில், அவரது பெயரில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு அர்ச்சனைகள் நடை பெற்றது.

தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள பழனிச்சாமி நீடுழி வாழ வேண்டும், அனைத்து காரியங்களிலும் அவர் வெற்றி பெற வேண்டுமென எனது தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர அதிமுக செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான வி கே எஸ் சக்தி வேல், நகர அவைத் தலைவர் சேக் மைதீன், நகர பொருளாளரும் நகர் மன்றஉறுப்பினருமான
கே.வசந்தன். நகர துணை செயலாளர் சிவசங்கரன், நகர அம்மா பேரவை செயலாளர்
கே.சங்கர், கழகப் பேச்சாளரும் மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் கே பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி கே.மாரி செல்வம், நகர மீனவரணி எஸ் அருள் ஆனந்த், வார்டு செயலாளர் கே ஞானசேகரன், நகர இளைஞரணி எம் பரமசிவன், வீராணம் பழனிச்சாமி கணேசன், பசும்பொன், மாரியப்பன் சிவக்குமார் சுபிக்ஷா கருப்பசாமி மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட
பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *