துபாயில் 2024ம் ஆண்டிற்கான 10வது சர்வதேச யோகா போட்டி நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர், துபாய், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய 9 நாடுகள் கலந்து கொண்டன.
இதில் இந்திய அணி சார்பில் 50 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 35 வீரர்கள் பங்கேற்றனர். தமிழக வீரர்கள் 12 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என பதக்கங்களை பெற்றனர். சென்னையை சேர்ந்த தர்ஷிகா சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வென்றார். ராஜபாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி யோகவீணா 2வது இடத்தை கைப்பற்றினார். துபாயில் நடந்த போட்டிகளில் பதக்கங்களை வென்று சென்னை விமான நிலையம் திரும்பிய 35 வீரர்களுக்கு இந்திய யோகசனா விளையாட்டு கூட்டமைப்பு தமிழ்நாடு கிளை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்களின் பெற்றோர், யோகா பயிற்சியாளர்கள் வரவேற்றனர். யோகா போட்டிகளில் கலந்து கொள்ள அரசு உதவி வழங்கிட வேண்டும். அரசு உதவி செய்ததால் ஒலிம்பிக்கில் பங்கு பெற கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிட வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.