பேண்டி அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் சிக்ஸ்த் நேஷனல் ஃபெடரேஷன் கோப்பை 2024 மே பதினொன்றாம் தேதி மற்றும் 12ஆம் தேதி நடைபெற்றது இதில் பங்கேற்பதற்காக இந்திய அளவில் இருந்து வீரர்கள் கோவாவிற்கு சென்றனர்
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் சென்றனர் இந்த பிராண்டி ஐஸ்கேடிங் போட்டியானது கோவாவில் நடைபெற்ற நிலையில் அங்கு ஐஸ் கிரவுண்ட் இல்லாததால் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியாக நடைபெற்றது
இந்த போட்டியில் தமிழக வீரர்கள் 70 பதக்கங்களை பெற்றனர் அதில் ஏழு வெள்ளிப் பதக்கம் நான்கு வெள்ளி பதக்கம் உட்பட எழுவது பதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது
இதில் பங்கேற்ற வீரர்கள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அவர்களது உறவினர்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அணியின் மேனேஜர் பிரசன்ன குமார் கூறியதாவது கடந்த ஒன்பதாம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு கோவாவிற்கு சென்று உள்ளதாகவும் அங்கு போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு உட்பட ஹரியானா மகாராஷ்டிரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் சேர்ந்த அணிகள் பங்கேற்றது
என்றும் தமிழ்நாட்டில் இருந்து 100 மாணவர்கள் மாணவிகள் பங்கேற்றார்கள் என்றும் தெரிவித்தார் மேலும் பேண்டி ஐஸ் ஹாக்கி பயிற்சி பெறுவதற்காக நாங்கள் டெல்லி ஜம்மு அண்ட் லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் இந்த பேண்டி ஐஸ் ஹாக்கி பயிற்சி பெறுவதற்காக தமிழகத்தில் அரங்கு இல்லை என்றும் அதனை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த போட்டியில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.