பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறினார்;-

“கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியர்கள் புகழப்படுகிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சனாதன கலாச்சாரம் இன்று மேலோங்கியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மிகவும் சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது.

நாட்டிற்கு புதிய பாதையை பிரதமர் மோடி அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவரது தலைமையில் ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் வரப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆயுஷ்மான் யோஜனா, லக்பதி தீதி யோஜனா, கிசான் சம்மான் நிதி மற்றும் உஜ்வால் யோஜனா ஆகிய திட்டங்களால் ஏழைகள் பயனடைகின்றனர்.”

இவ்வாறு புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *