தென்காசி, மே – 22
தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆவது நினைவு தினம் தென்காசி காந்தி சிலை முன்பு நடைபெற்றது
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஜி.மாடசாமி ஜோதிடர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன், மாவட்ட மகளிர் அணி தலைவர் பூமாதேவி, நகர துணைத் தலைவர் தேவராஜன், பொருளாளர் ஈஸ்வரன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரபீக் இளைஞர் காங்கிரஸ் பிரேம்குமார், மாவட்ட சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை தலைவர் என்.கணேசன், கண்ணன், ஏ எல் என் ஆறுமுகம், பீர்முகம்மது, லட்சுமணன், ஹசன் இப்ராஹிம், முத்துமாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சிங்கக்குட்டி என்ற குமரேசன் தலைமை வகித்தார். ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி செயலாளர் பொன் கணேசன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் இசக்கி ராஜ், கோடீஸ்வரன், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சின்ன ராஜா, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாரிமுத்து, ஓபிசி தலைவர் தாமோதரன், முன்னாள் நகர தலைவர் பொன் ராஜகோபால், தினேஷ் பெரியசாமி முத்துக்குமார், நகர வர்த்தக அணி கணேசன், ராமசாமி நாடார், முருகன், பால் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.