குன்னம் பெரியவெண்மணி நாச்சாரம்மன் கோயிலில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி கிராமத்தில் உள்ள நாச்சாரம்மன், மாணிக்க அம்மன், மாக்காயிஅம்மன் , கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதம் 13 -ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்றது
அதைத்தொடர்ந்து நேற்று காலை நாச்சாரம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து நாச்சாரம்மன் , மாணிக்கஅம்மன், மாக்காயி அம்மன்களுக்கு மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெடி, மேள தாளங்கள், முழங்க சாமி திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் காலை 10, மணியளவில் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் திருச்சி இணை ஆணையர் முன்னிலையில் கோயில் தக்கார் சுசீலா, மற்றும்
கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் கோயிலை சுற்றி வந்து இன்று மாலை நிலை நிறுத்தப்படும் அதைத்தொடர்ந்து
இந்த தேரோட்ட விழாவில் கொளப்பாடி, சின்னவெண்மணி, புதுவேட்டகுடி, காடூர், நல்லறிக்கை, வேப்பூர், உட்பட 20. க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவின் ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர் மேலும் இந்த தேரோட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கு குன்னம் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.