செய்தியாளர் மணிகண்டன்
கிருஷ்ணகிரி மத்தூரில் கோடை மழைக்கு சரிந்த புதிய தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சாய்வு தடுப்புகள்! மக்கள் கூடியதால், போலீசார் சமரசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே புதிதாக கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் ஒன்றில் நேற்று பெய்த கோடை மழைக்கு சாய்வு தடுப்புகள் சரிந்து விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் கூடினர்.
சமீபத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், நேற்று மாலை பெய்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்வு தடுப்புகள் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து சாலையில் கூடியதாக கூறப்படுகிறது .
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மக்களை சமாதானப்படுத்த முயன்றனர். பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த போலீசார்,மக்கள் கலைந்து சென்றனர்
சில மணி நேரத்திற்குப் பிறகு, போலீசாரின் உறுதியின் பேரில், மக்கள் கலைந்தனர். பாலத்தை சரிசெய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய பாலம் இத்தனை விரைவில் சேதமடைந்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாலத்தின் தரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது