கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி குழந்தைகளை அழைத்துவர பயன்படுத்தும் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 24 தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்தும் 201 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா தலைமையில்
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பள்ளி பேருந்துகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பேருந்துகளில் தரம், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி கதவுகள், முதலுதவி பெட்டி மற்றும் பேருந்துகளில் ஆவணங்களை நேரில் பார்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டு 20 பள்ளி பேருந்துகளை நிராகரித்தனர்.
முன்னதாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும் அவசர கால முதலுதவி மற்றும் தீயணைப்பு குறித்து பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது
இந்த ஆய்வின் போது தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்