விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் துவங்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் நகர தொழில் தந்தை பிஏசி ராமசாமி ராஜா நினைவு கபடி போட்டிகள் 61 ஆண்டாக ராஜபாளையத்தில் துவங்கியது.
கபடி கழக தலைவர் கபடி ஏ பி எஸ் ராஜா தலைமையில் மாவட்ட துணை தலைவர் டைகர் சம்சுதீன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
துணைச் செயலாளர் டி ராம்சிங், மற்றும் ராமச்சந்திர ராஜா ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் முகவூர் தவம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் அய்யனாபுரம் ஒய்ஏ கே சி அணியும் முதலாவது ஆட்டத்தில் மோதின. இதில் தவம் ஸ்போர்ட்ஸ் கிளப் முகவூர் அணி 39-13 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து தளவாய்புரம் தமிழ்த்தாய் அணியும் அய்யனாபுரம் இளம் புலிகள் அணியும் மோதியது. ராஜபாளையம் எவர் ஸ்கிரீன் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி அணியும் தொடர்ந்து மோதியது. நாளை கால் இறுதிப் போட்டிகளும், நாளை மறுதினம் அரை இறுதிப் போட்டிகளும், மகளிருக்கான இறுதிப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை பிஏசி ராமசாமி ராஜா நினைவு கபடி குழு மற்றும் விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.