பூச்சிகளை விரட்டும் “நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி:-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி கோபால் என்பவரின்
மிளகாய் தோட்டத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் , சௌமியா. ஆ,பவித்ரா,
நா,பிரிய ரோஷினி ர,பொன்நவீனா.
வே, ஆகியோர் பூச்சிகளை விரட்டும் ” நீமஸ்த்ரா ” குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர் இதனை ஏக்கர் ஒன்றுக்கு 50 ml நீமஸ்த்ரா கரைச்சலை எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிக்கலாம்.
அக்கரைச்சலை தயாரிக்க, 5 கிலோ வேப்பிலை நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும் . பின்னர் அதில் 2 லிட்டர் மாட்டு கோமியத்தில் 2 கிலோ மாட்டு எருவை தண்ணீருடன் அரைத்து வைத்த வேப்பிலை விழுதையும் சேர்த்து நன்கு கலக்கி 24 மணி நேரம் நன்கு புளிக்க வைக்க வேண்டும்.
பயன்படுத்துவதால், பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிப்பதோடு பயிர் வளர்ச்சி ஊக்குவித்து மண் வளத்தை மேம்படுத்துக்கிறது. இது சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை முறை புச்சிக்கொல்லியாகும் என்று நீமஸ்த்ரா குறித்து விளக்கம் அளித்தனர்
கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் காளிராஜன், அப்துல் ரசாக், கோமதி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.