செய்தியாளர் மணிகண்டன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர் கிராமத்தில் கலை பிரதர்ஸ் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டிக்கு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், கொம்மம்பட்டு தொழிலதிபர் அர்ஜுனன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊராட்சிமன்ற தலைவர்கள் உப்பாரப்பட்டி செல்வகுமார், கோவிந்தாபுரம் லட்சுமணன், கெங்கப்பிராம்பட்டி வெங்கடேசன், பேயனூர் ஊர் கவுண்டர் சம்பத், தர்மகர்த்தா ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாநில கபடி வீரர் விதுரன், மாவட்ட கபடி சங்கத் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் நாள் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் 20 அணிகள் கலந்துக்கொண்டது.
அதில் மொரப்பூர் அண்ணைபிரதர்ஸ் அணி முதல் பரிசாக 15,015 ரூபாய், தர்மபுரி தமிழன் பிரதர்ஸ் இரண்டாம் பரிசாக 10,015 ரூபாய், பேயனூர் ஸ்போட்ஸ் கிளப் மூன்றாம் பரிசாக 7,015 ரூபாய் ,உள்பட 8 பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை பேயனூர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.