தென்காசி மே 30 தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தென்காசி தெற்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பங்கேற்று வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்