பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், அரணாரை கிராமத்தில் திருவள்ளுவர் தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் திருவிழா பத்தாம் நாள் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் திருவிழா தொடங்கி குடி அழைத்து வெள்ளிக்கிழமை யானை வாகனத்தில் வான வேடிக்கையுடன் மாரியம்மன் ஊர்வலம் சனிக்கிழமை சிங்க வாகனத்தில் வானவேடிக்கையுடன் மாரியம்மன் வீதி உலா வந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேல் திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு மலர் அலங்காரம் அலங்கரித்து ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து அம்மன் அருளை பெற்று சென்றனர்.
இந்நிகழ்வில் வந்திருந்த பொது மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், மக்களுக்கு எவ்வித பாவித்துக்கும் ஏற்படாதவாறு பாதுகாப்புடன் செயல்பட்டனர். திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.