கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு. தேனி மாவட்டம் கம்பம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரமாகும் கம்பத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கம்பம் மெட்டு கேரளா பகுதியைச் சேர்ந்தது இது போல் கம்பத்திலிருந்து குமுளி 20 கிலோ மீட்டரில் கேரளாவை இணைக்கிறது.
இரு பகுதிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனைச் சாவடிகள் உள்ளன அப்படி இருந்தும் கேரளாவில் இருந்து அங்கு சேகாரமாகும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை மலைச் சாலைகளில் மலை போல் வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்
இதனால் தமிழக பகுதியான கம்பம் கூடலூர் பொது மக்களுக்கும் அவ்வழியாக கேரளா செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது
மேலும் குப்பை காடாக தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் இருப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது
இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்க தமிழக கேரளா எல்லைகளில் உள்ள தமிழக அதிகாரிகள் குப்பை கொண்டு வந்து கொட்டும் மர்ம நபர்களை கண்டறிந்து சரியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு அந்த வழியாக வரும் வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்