வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை.
திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனிரோடு, நத்தம் ரோடு, திருச்சி ரோடு, R.M.காலனி, R.S.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆவின் பாலகங்கள் மாநகராட்சி இடம் அனுமதி பெறாமல் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த பாலகங்களை அகற்றுவதற்கான பணி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் ஓரிரு நாட்களில் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.