புவனகிரி மே 31
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் என்பவருக்கு வளர்ந்து வரும் சிறந்த சமூக சேவகருக்கான விருது அறம் பவுண்டேஷன் சார்பில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திரைப்பட நடிகர் இயக்குனர் பாக்கியராஜ் நடிகரும் பட்டிமன்றம் பேச்சாளருமான ஞானசம்பந்தம் ஆகியோரின் கரங்களால் வழங்கப்பட்டது
இந்த விருதானது கீரப்பாளையம் ஊராட்சியை தனி சிறப்புடன் செயல்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து செய்து சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி செயல்பட்டு வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கொண்டு வளர்ந்து வரும் சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு பல்வேறு அமைப்பினர் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்