எஸ் செல்வகுமார் சீர்காழி
சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சாமி தரிசனம் பொதுமக்களுடன் செல்பி எடுத்து கொண்டனர்:-
நவகிரகத்தில் கேது ஸ்தலமாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப் பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது இங்கு கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றார்.
நவகிரக கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளரும் தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கேது ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து கேது பகவான் வழிபாட்டுக்கு பின் தாமரைப்பூமாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு செய்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பொதுமக்களை மகிழ்வித்து கொண்டார். தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் பாஜக முக்கிய தலைவர்கள் பல்வேறு கோவில்களில் வழிபட்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கேது பகவான் ஸ்தலத்தில் வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.