வலங்கைமான் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை, திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெரு ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு பைரவர் ஹோமம், கடம் புறப்பாடு, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர் ஆகியவற்றிற்கு கலசாபிஷேகம், மகா அபிஷேகம் சிறப்பு ஆராதனை உடன் நடைபெற்றது. பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.