ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ
தலைமையில் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குருப்-4 தேர்வு திருவாரூர் குடவாசல் மன்னார்குடி நன்னிலம், நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை வலங்கைமான் ஆகிய 8 மையங்களுக்குட்பட்ட 96 இடங்களில் 124 தேர்வறைகளில் எதிர்வரும் 09.06.2024 காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது இத்தேர்வில் 34,532 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில், 124 முதன்மை கண்காணிப்பாளர்களும் 30 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 13 பறக்கும் படைகளும் 124 ஆய்வு அலுவலர்களும் 131 வீடியோ ஒளிப்பதிவாளர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குநர் சி.ப்ரியங்கா மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்) செல்வி.கீர்த்தனா மணி (மன்னார்குடி உதவி ஆணையர் (கலால்) கண்மணி மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மண மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்