எஸ் செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்
சீர்காழி அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் காயம்.
கோயம்புத்தூரில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை அருகே திருப்பத்தில் வளைந்த போது சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாடை இழந்து திடீர் என கவிழ்ந்தது இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் திருநன்றியூர் பகுதியை சேர்ந்த ரவி (40) என்பவர் காயமடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பேருந்தில் பயணம் செய்த பத்துக்கு மேற்பட்ட பயணிகளுக்கு காயம் இன்றி தப்பினர். அவர்கள் மாற்றுப் பேருந்தில் தங்கள் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.