உலக சிலம்பம் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 15 தங்கம் 11 வெள்ளி 15 வெண்கலம் வென்று அசத்தினர் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மாணவியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி.
உலக சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது சிலம்பம் போட்டி மலேசியாவில் கடந்த மே 25ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடைபெற்றது மேலும் இந்த போட்டியில் மலேசியா இந்தியா கத்தார் துபாய் ஸ்ரீலங்கா சுவிட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் இருந்து 800-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு உட்பட பல மாநிலத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பன்னிரு கலைஞர் கழகத்தின் மூலம் குளோபல் சிலபம் அகாடமி பள்ளி வழியாக 26 மாணவ மாணவியர்கள் மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் பங்கேற்பதற்காக சென்று இருந்தனர் இரண்டு மாதங்களுக்கு மேல் பயிற்சி எடுத்து உலக தரத்தில் வாய்ந்த பயிற்சிகளை எடுத்த பின்பு இந்த போட்டியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் இதில் 15 தங்கம் பதக்கம் 11 வெள்ளிப் பதக்கம் 15 வெண்கல பதக்கம் வென்று உள்ளார்கள் என்றும் இந்த பதக்கங்கள் அனைத்தும் தனித்திறமை ஓபன் வெப்பம் சண்டையிடும் முறை என அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது மேலும் பதக்கம் வென்ற அனைவரும் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் சென்னை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.