செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இன்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகையிலை இல்லா தேசம் அமைப்போம் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன், எக்ஸ்னோரா கிளை ஒருங்கிணைப்பாளர் க. பூபாலன், பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடிய விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர்.
மேலும் மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை காமாட்சி நன்றி கூறினார்.