உலக புகையிலை எதிர்ப்பு தினம் – இந்தியாவில் முதன் முறையாக புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனையை அறிமுகம் செய்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்…..

ஆண்டுதோறும் 30சதவீதம் பேர் புகை பிடிப்பதினால் புற்று நோயுடன் மாரடைப்பு ஏற்பட்டு வருவதாகவும்,அதே போல் பெற்றோர்கள் புகை பிடிப்பதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என புற்றுநோய் சிகிச்சையின் ஆராய்ச்சி மருத்துவர் குகன் தெரிவித்துள்ளார்..

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் முதல்முறையாக புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனை தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த அறிமுக விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதன் மூலம் புகையிலை மற்றும் புகை பிடிப்பதற்கு அடிமையாகிய நபர்கள் விழிப்புணர்வுடன் இலவச ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த,புற்றுநோய் சிகிச்சையின் ஆராய்ச்சி மருத்துவர் குகன்,புகையிலை பழக்கம் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.குறிப்பாக புற்றுநோய் வருவதற்கு முன்பு தடுக்க வேண்டும் எனவும், இதற்காக மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பெற்றோர்கள் புகை பிடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் ஆண்டுதோறும் புகைப்பிடிப்பவர்கள் அதிகமாகி வருவதாகவும், 30 சதவீதம் பேர் புகையிலைனால் புற்றுநோய் வருவதுடன் மாரடைப்பும் ஏற்படுகிறத. இதனை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் இந்தியாவில் 8 முதல் 9 லட்சம் பேர் புகையிலைனால் இறப்பதாக மருத்துவர் குகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *