ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
பாலஸ்தீனின் ரஃபா மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராக இரவாஞ்சேரியில் திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்.
ரஃபா மீதான மனிதாபிமானமற்ற தாக்குல்கள்
இரவாஞ்செரியில் இஸ்ரேலின் அடாவடியை கண்டித்தும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் பதாகைகள் ஏந்தி எஸ்டிபிஐ முழக்கம்
பாலஸ்தீனில் ரஃபா நகரில் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன் மக்களை உலக நாடுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போர் குற்றங்களை புரியும் அடாவடி இஸ்ரேல் மீது தடை விதிக்கவும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவை முறிக்க வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், பதாகைகள் ஏந்தி முழக்கமிடும் நிகழ்வுகளும் நடைபெற்றன
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் இரவாஞ்சேரியில் இன்று (மே 31) கண்டன ஆர்ப்பாட்டம் (or) பதாகைகள் ஏந்தி முழக்கமிடும் நிகழ்வு நடைபெற்றது
எஸ்டிபிஐ கட்சியின் கிளை பொறுப்பாளர் ரம்ஜுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் மாஸ்அப்துல் அஜீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் நிகழ்வில் எஸ்டி டி யு கரீம் அதிமுக புஹாரி ஜமாத் முன்னாள் தலைவர் ஹபீப். நஸீர் அன்சாரி சுல்தான் ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோர்) கலந்து கொண்டு இஸ்ரேலின் அடாவடிக்கு எதிராகவும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர்